வாழ்க்கை
அன்று ஒரு நாள்
ஜன்னல் வழி வெறித்தேன், சிந்தித்தேன்…..
வானவில் ஆகலாம் என்று; கதிரவன் மறைந்தால், என்ன ஆகுவேன் ?
பறவை ஆகலாம் என்று; சிறகுகள் உடைந்தால், என்ன ஆகுவேன் ?
கதிரவன் ஆகலாம் என்று; பூமி சுழன்ற பின், என்ன ஆகுவேன் ?
காற்று ஆகலாம் என்று; இயற்கை அசைவு நின்றால், என்ன ஆகுவேன் ?
நதி ஆகலாம் என்று; நீரோடை வற்றினால், என்ன ஆகுவேன் ?
அறிந்தேன் நான் உயிர்; நான் தானே அனைத்தும்
அனைத்தும் நான், என் மனதில்
புன்னகையில் பூரித்தேன்
மீண்டும் வெறித்தேன் …….
நதி
நதியே நீ
சலங்கை விளுங்கினயோ
நடனம் கற்றாயோ
ஓவியன் அகினயோ
வானவில் விளுங்கினயோ
சந்தோஷத்தின் குத்தகை காரியே
நதியே நீ
தாயோ
குழந்தையோ
அரசியோ
சர்வாதிகாரியோ
யாரடி நீ?
ஓயிலாய் பற்பல பரிமானங்கலுடன்,
மனதை கொள்ளை அடிக்கும், கொல்லைகாரியோ!!!!
தனிமை
கற்றுகடங்கா கற்பனையா
எல்லையில்லா மகிழ்ச்சியா
வானவில் நிரம்மா
மலை அளவு சக்தியா
வரையறை இல்லா நீலபரப்பா
பறந்து இருக்கும் வானமா
கொந்தளிக்கும் கடலா
கொப்பளிக்கும் எரிமலையா
சீரும் சுனாமியா
இடிந்து முழங்கும் மின்னலா
பிளந்து நிற்கும் பூகம்பமா
வருகிறாய், செல்கிறாய்
உன் உருவம் தான் என்ன?
வருவாய்
உறவாடுவாய்
உண்பாய்
மகிழ்வாய்
ஒட்டிகொள்வாய்
ஒன்றிடுவாய்
மென்மையாய் காத்திருப்பாய்
உரிமையோடு ஆட்கொள்வாய்
உடலோடு உடலாக
இரதத்தின் இரத்தமாக
உடன் பிறந்ததாக, அனைத்தும் தந்தும்
நன்றி கெட்டதோ?
அழையா விருந்தாளியே
உனக்கு தடா உண்டா ?
அனாதை
காசு உண்டு உறவு இல்லை
பசி உண்டு ருசி இல்லை
அறிவு உண்டு அமைதி இல்லை
படிப்பு உண்டு வேலை இல்லை
பெற்றோர் உண்டு அன்பு இல்லை
திறமை உண்டு காசு இல்லை
வீடு உண்டு காதல் இல்லை
திருமணம் உண்டு நட்ப்பு இல்லை
மக்கள் உண்டு ஊன்று இல்லை
உறவுகள் உண்டு தோழமை இல்லை
உடல் உண்டு உறக்கம் இல்லை
ஆசை உண்டு அளவு இல்லை
கண்கள் உண்டு காண்போர் இல்லை
செவிகள் உண்டு கேட்போர் இல்லை
கால்கள் உண்டு நடனம் இல்லை
நீ உண்டு பெற்றோர் இல்ல
யார் ஆனாதை? நானா? நீயா ????????????????
அகம் மகிழ
உணர்வு ஒன்றிட
மூளை செயல்பட
புலன்கள் சீராக
நாடி நரம்பில் ஏறி
முன்னேற துடித்து
பிறரை கவனித்து
தானாக கற்று
சுயமாய் நினைத்து
அறியாமலே அறிந்து
பல பரிமானங்கள் ஏற்று
நினைவில் நலன் விரும்பி
உடன் இருப்பாரை ஏற்றி
தானும் ஏறி
சிகரம் சேரும் ஏணி !!
யான் அடி மேல் அடி வைக்க
வரவேற்று காத்திருக்கும்
மகிழ்ச்சி
ஆச்சிரியம்
துக்கம்
கோபம்
இகழ்ச்சி
அமைதி
அறிவு
பொறுமை
எதிர்பார்ப்பு
உறவு
நட்ப்பு
ஏற்றம்
மறைந்து, ஒளிந்து, காத்து, கண் சிமிட்டும் இரத்தின கம்பளம் ……….
உறவு
இரு உடல்
இரு உயிர்
இரு உணர்வு
ஒன்று பட துடிக்கும்
ஒன்றிட உழைக்கும்
ஓட்டிகொள்ள இணையும்
இருவரின் துடிப்பு
நேற்று இன்று நாளை
முற்றும் - பச்சை மையில் கையப்பம் இட்ட காகிதம்
ஜனித்தது - சிவப்பு மையில் திருத்த முடியும் காகிதம்
உருவாவது - கருப்பு மையால் எழுத கூடிய சாசனம்
மழை
வானவராயர்
பூமி தாய்க்கு
விடும் காதல் தூதூ தானோ ?
இசை
உருவம் இல்லா காற்றை
சுவாசித்த மூங்கிலே …..
சென்சோற்று கடனாக
ஈன்று கொடுத்த உயிரோ ?
--------*---------
கொனர்ந்தாயா???
பிறந்தன
விழித்தன
தவழ்ந்தன
நடந்தன
ஓடின
தோழமை சேர்த்தன
விரும்பியவை
உண்டன
கல்வி கற்றன
அழகாய் உடித்தின
அலங்காரம் பூண்டன
உலகம் பார்த்தன
பட்டம்
பெற்றன
பணியும்
பெற்றன
உணர்வுகள் வளர்த்தன
தன்னை அறிந்தன
காதல் கொண்டன
திருமணம் பூண்டன
செல்வங்கள் பெற்றன
வருடமும்
கழிந்தன
முதுமை
சேர்ந்தன
நீ நீந்திய கடலில்
நிம்மதி முத்துக்கள்
நீ கொனர காத்து
சிலிர்து பூத்திருந்தன .....
அலை
அன்பு தாயின் அக்கறை போல்
அரவணைக்கும்
தந்தையின் வழிகாட்டல் போல்
அருமை உறவின் ஒட்டுதல் போல்
ஆசை தோழமையின் பரிவு போல்
அழகு காதலின் மயக்கம் போல்
அடுத்து
அடுத்து
ஆடி ஆடி
அரையும்
ஒன்றுமாய்
மனதோடு ஒன்றிகொண்டாய்....