About Me

My photo
Fun loving - with life and fusion cooking. Believe in Love, Friendship, Help and Trust. Spiritual and believe in 'Love is God'. Thankful for the blessings life has showered on ME.

Wednesday, October 14, 2015

Tamil Poems - Part II

அலை


ஆட்டமாய் ஆடிய அலையே
அன்பு தாயின் அக்கறையாய்
அரவணைக்கும் தந்தையின் வழிகாட்டியாய்
அருமை உறவின் ஒட்டுதலாய்
ஆசை தோழமையின் கேலியாய்
அழகு காதலின் மயக்கமாய்
அனைத்தும் போல் கிளர்ச்சி தூண்டி
அடுத்து அடுத்து ............
அறையும் ஒன்றுமாய் வந்து அசரவைதயெ

******/******
பசிக்கு உணவு
விழிகளுக்கு பெருங்காட்சி ,
நாவிற்கு தேனருவி ,
மூளைக்குள் திருமணம் ,
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி ,
உணர்வுகள் தடுமாற ..
கை தட்டுடன் ஒப்பந்தமிட ...
காதல் கொண்ட என் செல்கள்
ஒற்றை விநாடி செயல் அற்றதுவே


********************************/******************************

உயிருக்கு இருட்டறை கருவறை 

உயிரின் இருட்டறை கல்லறை 


*******************/*******************


     

வானில் குழந்தை தேவதைகள் அடித்து விளையாடிய
தலையணை பஞ்சு துகர்கள்
பனி மழையாய் அழகாய் பொழிய
அடித்து விளையாடி ஆர்பரித்தன பூமி குழந்தை தேவதைகள்


No comments:

Post a Comment